மின்னஞ்சல் : tepu_lpf@yahoo.co.in
வலைத்தளம் : www.tepuchq.org.in
Website in English & Hindi  : www.tepuhqrs.org
பிஎஸ்என்எல்யியு உடனான கூட்டணியும் உறவும் முறிவு

நமது முன்னாள் அமைச்சர்கள் திரு..இராசா மற்றும் திரு. தயாநிதி மாறன் ஆகியோர் மீது அவதூறான மற்றும் தரக்குறைவான கருத்துக்களை, திரு.அபிமன்யு,பொதுச்செயலர், பிஎஸ்என்எல்யியு அவர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் தெரிவித்ததை தொடர்ந்து, நமது பத்தாண்டுகளுக்கும் மேலான பிஎஸ்என்எல்யியு உடனான கூட்டணியும் உறவும் முறிந்தது

BSNL தொழிற்சங்கங்கள் / அசோசியேஷன் களின் கூட்டமைப்பின் அங்கமாக தொடருகிறோம்
தபால் தந்தி தொழிலாளர்களின்
நினைவில் நிலைத்து வாழும்
 
தொ மு பேரவையுடன் இணைப்பு
தொலைத்தொடர்பு ஊழியர் முன்னேற்றச் சங்கம்
திரு. கேஆர் அவர்களுக்கு
இந்த வலைத்தளம் சமர்ப்பணம்

மத்திய சங்கம்  தில்லி அலுவலகம்

டி
- 4, அதுல் குரோவ் ரோடு,
ஈஸ்ட்டர்ன் கோர்ட் பின்புறம்,புது தில்லி 110001
தொலைபேசி: 23321844
மத்திய சங்கம் சென்னை அலுவலகம்

கலைஞரகம், 25, தியாகராயா தெரு,
வடக்கு உஸ்மான் சாலை
தி.நகர், சென்னை 600017
தொலைபேசி: 28142322
14.2.2015 அன்று 1700 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது
மற்ற வலைத்தளங்கள்
முகப்பு
மறைந்த தோழர் ஓ.பி.குப்தா அவர்களது வாழ்க்கை சரித்திரத்தை விளக்கி, என்.எஃப்டியி சென்னை
தொலைபேசி மாவட்டம் திரு.எல்.சுப்பராயன் அவர்களை நூலாசிரியராகக் கொண்டு
“தன்னிகரில்லாத தலைவர்” என்ற தலைப்பில் ஒரு நூலை 07.1.2015 அன்று திருவள்ளூரில்
வெளியிட்டுள்ளது.

அந்நூலில் காணப்படும் சில துளிகள்

     1940 களில், தென்னிந்தியாவில் பிராமணர்கள், முஸ்லீம்களின் விசித்திரக்கூட்டாக Indian Post of
Telegraph Union அமைந்தது (K.ராமமூர்த்தி, M.A.ஜப்பார்) - ( பக்கம் 20 முதல் பத்தி )

அச்சங்கத்தின் தென்னிந்திய பிரிவின் துணைப்பொதுச்செயலராக K.ராமமூர்த்தி இருந்தார். அவர்
தனது சுற்றறிக்கையில் குப்தா விரிக்கும் வலையில் யாரும் சிக்கிவிடக்கூடாது, சென்னை வரும்
குப்தாவை யாரும் சந்திக்கக்கூடாது, கூட்டத்திற்க்கு போகக்கூடாது, கூட்டத்தில் பேசவும்
குப்தாவை அனுமதிக்கக்கூடாது என்று தடையாணை பிறப்பித்தார்........ ( பக்கம் 25 முதல் பத்தி )

முதலில் எதிர்த்தவர்கள், பின்னர் குப்தாவின் சீரிய செயலை பாராட்டினர். குறிப்பாக K ராமமூர்த்தி,
குப்தாவின் செயலில் மௌண்ட் பேட்டனின் Touch  இருந்ததாக புகழாரம் சூட்டினார். ( பக்கம் 25
இரண்டாம் பத்தி )

K ராமமுற்த்தி “மாறுகின்ற சூழ்நிலையில் எது சரியாக தர்க்க ரீதியாக இருந்ததோ, அது
தவறுதலாகப் போகிறது என்ற வழுக்கலான வாதத்தை முன்வைத்தார். இதுதான் தோழர் K
ராமமூர்த்தியின் நேர் எதிர் மாற்றத்தின் துவக்கமாக அமைந்தது. தோழர் K R தீவிரவாதிகளின்
தோள்களில் சவாரி செய்து பொதுச்செயலாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..........  ( பக்கம் 30
முதல் பத்தி )

K R டெல்லியில் தங்கிய பிறகு அப்போதைய துணை அமைச்சரான குர்ஷித்லாலுக்கு
செல்லப்பிள்ளை ஆனார் KR. குப்தாவை நிரந்தரமாக வெளியேற்ற ஒரு மாற்றுத் திட்டமாக
அரசாங்கம் சங்க பொறுப்பாளிகளை டெல்லிக்கு அயற்ப்பணிக்கு அழைக்கும் சங்க உரிமையை
ஏற்றுக்கொண்டது. சிறிது காலத்திற்க்குள்ளாகவே, குப்தாவை பஞ்சாப் மாநில சங்கத்தின்
தலைவராகக்கூட வரவிடாமல் செய்ய முயற்ச்சிக்கும் அளவுக்கு தன் கருத்துக்களை
மாற்றிக்கொண்டார் KR. ஆனால் அம்முயற்ச்சியில் அவர் தோற்றார். (பக்கம் 31 பத்தி இரண்டு)

அஞ்சல் மூன்றின் பத்திரிகையான “தி போஸ்ட்” இதழில் A S ராஜன், K ராமமூர்த்தி ஆகியோர்
“மிக்கியோன்”, “அப்சர்வர்” என்ற புனை பெயர்களில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு விஷத்தை கக்கி
கட்டுரைகள் தீட்டினர் .. ( பக்கம் 41 முதல் பத்தி )

12.10.1981 முதல் துவங்கும் என்று NFPTE பொதுச்செயலரான O.P.குப்தா அறிவித்தார். NFPTE
(P3) பொதுச்செயலர் K L மோசாவும், FNPTO பொதுச்செயலர் K ராமமூர்த்தியும் தங்கள்
சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்காது என்று நொண்டிச் சாக்குகளை கூறி துரோகம்
செய்தனர்.. ( பக்கம் 60 முதல் பத்தி )

NFPTE ஐ அழிக்க உருவாக்கப்பட்ட FNPTO, BPTEF ஆகிய சங்கங்களை முதலில்
தோலுரித்துக்காட்டி எதிர்த்தபோதும், காலப்போக்கில் Illegitimate child cannot be killed”
என்ற அடிப்படையில் அவற்றை ஒதுக்கி வைக்கக்கூடாது என்று அரவணைத்துக்கொண்டது..
( பக்கம் 90 முதல் பத்தி )

குறுகிய  நலன்  கருதி  FNTO சங்கம் தனது   சின்னத்தை   அடகு  வைத்து   BSNLEU வுடன்  
       முறையற்ற   கூட்டணி    வைத்தபோது.......( பக்கம் 90 முதல் பத்தி.)